• Nov 21 2025

தனது பெற்றோருடன் இணைந்து குட் நியூஸ் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து அண்மையில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கிட்டத் தட்ட 5 வருடங்களுக்கு மேலாக ஓடியது.

 கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதை அழகாக காட்டிய ஒரு தொடர் எனலாம். அண்மையில் தான் இந்த சீரியல் முடிவடைந்து இதன் இரண்டாம் பாகம் ஆரம்பமாகியுள்ளது. இரண்டாம் பாகம் அப்பா-மகன்கள் சென்டிமென்ட் வைத்து ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியான கண்ணனுக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா. இவர் சீரியல் முடித்த கையோடு புதிய காரை வாங்கியுள்ளார்.

புதிய காருடன் தனது அப்பா-அம்மாவுடன் இணைந்து அழகிய புகைப்படம் ஒன்று எடுத்து தனது இன்ஸ்டாவிலும் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement