• Jan 18 2025

விஜய்க்கு முத்தம் கொடுத்தது தப்பா... செய்தியாளர் கேள்விக்கு கொந்தளித்த இயக்குனர் மிஷ்கின்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் மிஷ்கின் "டெவில்" திரைப்பட செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் விஜய் அவர்களுக்கு முத்தம் கொடுத்தது விமர்சனம் தொடர்பில் பதிலளித்துள்ளார்.


நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்பட வெற்றி விழாவின் போது இயக்குனர் மிஷ்கின் விஜய் அவர்களை பாராட்டி பேசியதோடு அவர் கையை பிடித்து முத்தமிட்டார். இந்த விடையம் சில நாட்களாக மீம்ஸ் கிரியேட்டர்களினால் ட்ரோல் செய்துவரும் நிலையில் அது தொடர்பாக எழுந்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.


என்னை எல்லோரும் பணிவில்லாதவன் என்று கூறுவார்கள், நான் பணிவாக இருக்கிறேன் என்று சொல்வதில் சந்தோசம் அதுவும் எனது தம்பியிடத்தில் பணிவாக இருக்கிறேன் என்பதும் என்தம்பிக்கு பணிவாக முத்தம் கொடுத்தேன் என்பதும் பெரிய சந்தோசம். விஜய் உண்மையில் ஒரு லெஜண்ட் தான் நான் அவருக்கு முத்தம் கொடுத்தது இவ்வளவு விமர்சனம் ஆகுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.


மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பற்றி பேசாதீங்க எல்லா நியூஸும் பரப்படுகிறதுதான் இதை நான் சொல்கிறேன் என்மனதில் தோன்றியதை செய்கிறேன். என் தம்பிக்கு கையில் முத்தம் கொடுத்தது எனது மனதில் இருந்து செய்தது யோசித்து செய்யவில்லை. அவர் ஒரு மகா கலைஞன் அவரை பணிவாகத்தான் முத்தம் கொடுக்கணும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement