பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு ட்ராவெல்ஸிற்குப் போறேன் என்கிறார். அதனை அடுத்து பொலிஸ் பாண்டியன் வீட்டையும் கடைக்கும் போய் நிற்கிறார்கள். பின் கடைக்குப் போன பொலிஸ் நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க தங்க மயில் உங்க மேல கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க என்கிறார். அதைக் கேட்ட எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

இதனைத் தொடர்ந்து கோமதி அந்த வீட்டுக்காரங்க தான் எல்லா தப்பையும் செய்தாங்க நாங்க எதுவுமே பண்ணல என்கிறார். அதுக்கு பொலிஸ் அதையெல்லாம் ஸ்டேஷனில வந்து சொல்லுங்க என்கிறார். மறுபக்கம் பாண்டியன் உடனே கடையை எல்லாம் மூடிட்டு வரேல என்கிறார். பின் கோமதி, ராஜி பொலிஸ் ஸ்டேஷனில இருக்கிறதைப் பார்த்த சரவணன் ஷாக் ஆகுறார்.
அதனை அடுத்து கோமதி பாண்டியன் கிட்ட போய் எங்களை எப்படியாவது இங்க இருந்து கூட்டிட்டு போங்க என்கிறார். மேலும், ரொம்ப பயமா இருக்கு என்கிறார் கோமதி. பின் இன்ஸ்பெக்டர் கிட்ட பாண்டியன், என்ன புகார் கொடுத்திருக்காங்க என்று கேட்கிறார் பாண்டியன். அதைத் தொடர்ந்து சரவணன், மயில் புருஷன் நான் தான் இவங்க யாருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்கிறார்.

அதனை அடுத்து பாக்கியம் பொலிஸ் கிட்ட வந்து என்ர பொண்ணு செய்யுற வேலைக்கு இவங்க வீட்டில மரியாதையே இல்ல.. அப்புடி என்று இஷ்டத்துக்கு கதைச்சுக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட சரவணன் கோப்படுறார். பின் பாக்கியம் என்ர பொண்ணை இவங்க நகை கொண்டு வரச் சொல்லி கஷ்டப்படுத்துறாங்க என்று சொல்லி அழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!