தமிழ் சினிமா தற்பொழுது புதிய கதைகள், திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் என வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இப்பொழுது "நல்ல கதைகள் இருந்தாலும், தயாரிப்பாளர்கள் இல்லாததால் படம் எடுக்க முடியவில்லை" என்ற கவலையை பல திரைப்பட இயக்குநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் ‘அஸ்திரம்’ பட இயக்குநர் தனது வருத்தத்தை ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நேர்காணலின் போது ‘அஸ்திரம்’ பட இயக்குநர் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள சிக்கல்களை பேசினார். அதில் அவர் கூறியதாவது , "தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த கதைகள் மற்றும் புதுமையான சிந்தனைகள் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் திரையில் உருவாக தயாரிப்பாளர்கள் இல்லை என்றார். எங்களைப் போன்ற இயக்குநர்கள் நல்ல கதைகள் வைத்திருந்தாலும் தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது " எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றதுடன் சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன என்றார். ‘அஸ்திரம்’ பட இயக்குநரின் வருத்தம் தமிழ் சினிமாவின் உண்மையான நிலையை காட்டுகிறது. நல்ல கதைகளை கொண்ட இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும் வரை புதிய சினிமா வளர்ச்சி பெறுவது கடினம் என்றே கூறவேண்டும்.
Listen News!