• Jan 19 2025

இனியா விஷயத்தில் பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. எழிலுக்கு கோபி எடுத்துக் கொடுத்த சான்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா டான்ஸ் மாஸ்டர் வேண்டும் என்று பாக்கியாவிடம் ஐஸ் வச்சு கேட்கிறார். முதலில் சம்மதித்த பாக்கியா, அதன்பிறகு மாஸ்டரை தேடிப்பிடித்து உன்னை கொண்டு போய் கூட்டி வருவது எல்லாம் கஷ்டம் என்று மறுத்து விடுகிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் காலேஜில் பிராக்டிஸ் பண்ணுகிறார். அதற்கு அவருடைய நண்பிகள் சப்போர்ட் பண்ணுகிறார்கள். ஆனாலும் அங்கு வந்த டீச்சர் இனியா தானே போட்டில கலந்து கொள்ள போறா நீங்க இல்ல தானே என்று அவர்களை அனுப்பி வைக்கிறார். மேலும் இனியாவின் அம்மாவை வந்து சந்திக்குமாறும் தான் பேசுவதாகவும் சொல்லுகிறார்.

இதைத்தொடர்ந்து கோபியின் நண்பர் இன்னொருவரை கூட்டி வருகின்றார். அவர் சிங்கப்பூரில் நிறைய பிசினஸ் செய்ததாகவும் கோபியிடம் ஐடியா கேட்பதற்காகவும் வந்துள்ளார் என்று சொல்லி அழைத்து வருகின்றார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது இப்ப என்ன செய்யப் போறீங்க என்று கோபி கேட்க, தனக்கு மூவி டைரக்ட் பண்ணுவதற்கு ஆர்வம் இருப்பதாக சொல்கின்றார்.

இதனால் பெரிய டைரக்டர் ஒருவரை தேடி பிடித்து மூவி செய்ய வேண்டும் என சொல்ல, உடனே கோபி எதற்காக பெரிய டைரக்டரை எடுத்தவுடன் பார்க்கின்றீர்கள். இப்போது உள்ள இளம் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தானே.. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இப்போது ஹிட் ஆகும் என அவரின் மண்டையை கழுவி எழில் பற்றி சொல்லுகின்றார்.


ஒரு வழியாக அவரும் சம்மதிக்க, ஆனால் எழிலிடம் நான் சொல்லித்தான் நீங்கள் அவரை சந்தித்ததாக சொல்ல வேண்டாம் என்று கோபி அவரிடம் சொல்லி அனுப்புகின்றார். அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்.

இறுதியில் வீட்டுக்கு வந்த கோபி, தன்னை நினைத்து பெருமையாக சிரித்துக் கொண்டிருக்க அங்கு வந்த ராதிகா என்ன விஷயம் என்று கேட்கின்றார். அதற்கு பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் தான் எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்பதாகவும் எழில் விஷயத்தையும் இனியாவின் விஷயத்தை சொல்லி பெருமை படுகின்றார். ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ராதிகா தூங்கி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement