சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து, மீனா வீட்டிற்கு கிளம்ப ரோகிணி வித்யாவிடம் சொல்லி அவர்களை சாப்பிட வைக்கும் சாட்டில் அழைத்து வருமாறு சொல்லுகிறார். ஆனால் அதற்கு முன்பே அண்ணாமலை அவர்களை இருந்துவிட்டு வருமாறு சொல்லுகிறார்.
இதை தொடர்ந்து பார்ட்டியில் பிசினஸ் மேன் குடித்துக் கொண்டு இருக்க மனோஜையும் அழைக்கிறார். ஆனால் மனோஜ் வேண்டமென மறுக்க இறுதியில் அவரும் குடித்து விடுகிறார். அதன்பின் ரவியும் ட்ரிங்க் பண்ணுகிறார். ஆனால் முத்து மட்டும் குடிக்காமல் இருக்கிறார்.
மறுப்பக்கம் மீனா, ஸ்ருதி சாப்பிட செல்ல அவர்கள் முத்துவை சந்திக்காமல் வித்யா தடுக்கிறார். இறுதியில் முத்து ஒரு கட்டத்தில் குடித்து விடுகிறார். இதை பார்த்து ரோகிணி சந்தோசப்படுகிறார்.
இறுதியில் மீனாவும் ஸ்ருதியும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, முத்து, ரவி நன்றாக குடிக்கிறார்கள். அண்ணாமலைக்கு வாக்கு கொடுத்த காரணத்தினால் முத்து குடிக்க மாட்டார் என மீனா நம்பிக் கொண்டுள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!