• Jan 19 2025

அமரன் படத்தை பார்த்த ராணுவ வீரர்களின் ரியாக்ஷன்? வேற லெவலில் கிடைத்த விருது

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார்கள்.

அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் காரணத்தினால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு மேஜர் முகுந்த் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது மக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார். 

குண்டு துளைத்த அவ்ரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது  இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார்கள்  என்ற தகவல் பலருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.


இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு இந்த படத்தைப் பார்த்த ராணுவ வீரர்கள் கொடுத்த விருதைப் பற்றியும் சொல்லியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், படப்பிடிப்பு நடைபெற்ற போது இருந்த பதற்றத்தை விட இந்த படத்தை ராணுவ வீரர்கள் பார்க்கின்றார்கள் என்ற போது தான் பதற்றம் இன்னும் அதிகரித்தது. குறிப்பாக அவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பதட்டம் காணப்பட்டது. படத்தினை இடைவேளை வரை பார்த்த சீனியர் ராணுவ வீரர் வந்து 'யூ ஆர் இன் ராக்' என்று சொன்னார். படம் முடிந்த பிறகு அதே ராணுவ வீரர் என்னிடம் வந்து 'ஐ கிவ் யூ ஒன் மோர் ஆஃபர்' அதாவது உங்களுக்கு நான் மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறேன் என்றார்.

இதை கேட்டதும் எனக்கு இதுதான் சார் நீங்கள் கொடுக்கின்ற விருது என மகிழ்ச்சியோடு கூறினேன். நானும் முகுந்தும் மிடில் கிளாசில் பிறந்தவர்கள். இதனால் என்னால் அவரை எளிதாக உள்வாங்க முடிந்தது. நான் எந்த இடத்திலும் சினிமாவாக நினைத்து நடிக்கவில்லை என எனது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டினார் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement