• Feb 22 2025

அறுக்குறேனு நினைக்காதீங்க மனசுல பட்டத்தை சொல்லுறேன்... இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் டிவி பாக்கியலஷ்மி சீரியல் கோபி தனது இன்ஸராகிராமில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். 


இந்தியா இன்று 75 வது குடியரசு தினத்தை கொண்டாடுகின்றது. இந்த நாளில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது அதனை முன்னிட்டே  குடியரசு தினமாகக் கொண்டாடுகிறது . 1950 இல் , அதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்திய தேசிய காங்கிரஸால் சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்ட அதே நாளில் , அந்த நிகழ்வை கௌரவிப்பதற்காக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.


இந்நிலையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமையுடன் கொண்டாடும் குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் தவ்வில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி இந்திய மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


அவர் வெளியிட்ட வீடியோவில் ஜெய் ஹின்த், எல்லாரும் நல்லா இருக்கணும் எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள், முன்னர் எப்படி இருந்தாலும் இந்திய நாடு நம்ம நாடுனு சொல்லுற அளவுக்கு இப்ப இருக்கு, குப்பைய கண்ட இடத்துல போடாதீங்க. தண்ணிய வீணாக்காதீங்க, இப்படி சின்ன சின்ன விடயங்களை கடை பிடித்தால் நம்ப நாடு எவ்வளோ நல்லா இருக்கும் தெரியுமா? மனசுல பட்டத்தை சொல்கிறேன்" என்று கூறி வீடியோ ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ...    

Advertisement

Advertisement