ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ஐந்து நாட்களைக் கடந்துள்ள நிலையில், அதன் உலகளாவிய வசூல் விபரங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
'தங்கல்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், சுமார் 2,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியான இப்படம், ஆரம்பத்தில் சற்று மந்தமான வசூலைப் பெற்றிருந்தாலும், தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டு சந்தைகளில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தியாவிலும் ஒரே நாளில் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐந்து நாட்களின் முடிவில் உலகளவில் 630 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை இப்படம் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வார இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுவதால் வசூல் மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசூல் விபரங்கள் அதிகாரபூர்வமானவை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!