• Nov 10 2026

நயன்தாராவுக்கு கைகொடுத்த மூக்குத்தி அம்மன் 2.! வசூலில் எதிர்பாராத அதிரடி

shali / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுந்தர்.சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன் 2. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சினேகா, இனியா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

குறிப்பாக, நகைச்சுவை மற்றும் கற்பனை கலந்த கதைக்களத்தில் சுந்தர்.சி தனது வழக்கமான பாணியை வெளிப்படுத்தியுள்ளமை ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், இந்த ஆண்டில் நயன்தாரா நடிப்பில் வெளியான டாக்சிக் மற்றும் ஹாய் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், மூக்குத்தி அம்மன் 2 அவருக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இந்நிலையில், Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள வசூல் விபரங்களின்படி, இரண்டாவது நாளில் தமிழகத்தில் 2.30 கோடி ரூபாயும், தெலுங்கில் 15 இலட்சம் ரூபாயும் என மொத்தம் 2.45 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் நாளை விட இரண்டாவது நாளில் ஒரு கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளதுடன், இதுவரையான மொத்த வசூல் சுமார் 5 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நயன்தாராவின் அடுத்தகட்ட திரைப்பயணத்தில் மூக்குத்தி அம்மன் 2 முக்கியமான படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement