தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (20) வெளியான திரைப்படமே ‘ஓம்’.
இத்திரைப்படத்தில் சாய் பல்லவி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதுடன், மம்மூட்டி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வெளியான முதல் நாளிலேயே இத்திரைப்படம் உலகளவில் சுமார் 31.55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இந்தியாவில் மாத்திரம் சுமார் 17.70 கோடி ரூபாய் நிகர வசூலைப் பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு சந்தைகளில் சுமார் 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த இந்தத் தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!