• Nov 26 2026

ஹாலிவுட்டையே வியக்க வைத்த சாச்சனா.. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்.!

shali / 9 minutes ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'மகாராஜா'. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு எனப் பல அம்சங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

குறிப்பாக, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாச்சனா நமிதாஸின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டாம் ஹேங்க்ஸும் சாச்சனாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா, டாம் ஹேங்க்ஸுக்கு இந்தியத் திரைப்படங்களைப் பரிந்துரைத்தபோது, 'மகாராஜா' திரைப்படத்தையும் பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திரைப்படத்தைப் பார்த்த டாம் ஹேங்க்ஸ், பின்னர் கவிதா குப்தாவைச் சந்தித்தபோது தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போது, "அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை!" என சாச்சனா நமிதாஸின் நடிப்பைக் குறிப்பிட்டு வியந்து பாராட்டியதாக கவிதா குப்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்த சாச்சனாவுக்கு, தற்போது ஹாலிவுட் நட்சத்திரத்திடமிருந்தும் பாராட்டு கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன், சாச்சனாவின் நடிப்புக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement