• Nov 07 2026

தீபாவளிக்கு த்ரிஷா செய்யப்போகும் காரியம்.. ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 55 minutes ago

Advertisement

Listen News!

தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற நாய்களுக்கு உதவும் வகையில் நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள உருக்கமான வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, திரைப்படங்களில் நடிப்பதுடன் விலங்குகள் நலன் சார்ந்த விடயங்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில், இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆதரவின்றி மீட்கப்பட்ட நாய்களுக்கு உதவும் வகையில் புதிய முயற்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், ஆதரவின்றி மீட்கப்பட்ட ஒரு நாயின் ஒரு மாத உணவுச் செலவைத் தாம் ஏற்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெறும் 1,000 ரூபாய் இருந்தால் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு வழங்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த தீபாவளியில் தன்னுடன் இணைந்து ஏனையவர்களும் ஒரு நாயின் உணவுச் செலவுக்காக 1,000 ரூபாய் வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்காக ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு நன்கொடை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தீபாவளி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆதரவற்ற விலங்குகளுக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் நாளாக அமைய வேண்டும் என்ற அவரது இந்த வேண்டுகோள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

த்ரிஷாவின் இந்த மனிதாபிமான முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement