• Nov 23 2026

சூப்பர் ஸ்டாருடன் இப்படி ஒரு உறவா.? ரசிகர்களை வியக்க வைத்த ராஷி கன்னாவின் பேட்டி

shali / 18 minutes ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருப்பதாக நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷி கன்னா, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அண்மையில் அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் அதிக நேரம் பேசுவதாகவும், அவர் தற்போது தனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்திடம் அடிக்கடி பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவரைத் தொந்தரவு செய்வதாகவும், இருப்பினும் தன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவர் மிகவும் பொறுமையாகப் பதிலளிப்பதாகவும் ராஷி கன்னா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஜினிகாந்தின் அருகில் இருக்கும்போது தன்னை ஒரு குழந்தையைப் போல உணர்வதாகவும், ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒரு சாதாரண ரசிகையைப் போலவே தானும் இப்படத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துடனான தனது அனுபவத்தை ராஷி கன்னா இவ்வாறு மனம் திறந்து பகிர்ந்துகொண்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement