இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற இராணுவ மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நடிகர் சல்மான் கானின் புதிய திரைப்படமான 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதியை படக்குழுவினர் காணொளி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி இந்தியா – சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற இராணுவ மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மோதலில் இந்திய இராணுவத்தின் 16ஆவது பீகார் ரெஜிமெண்ட் அதிகாரியான கர்னல் சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இத்திரைப்படத்திற்கு 'பேட்டில் ஆப் கல்வான்' எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அதன் தலைப்பு மாற்றப்பட்டு 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' என அறிவிக்கப்பட்டது.
மேலும், புதிய தலைப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டரில் போரை விட அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் திரைப்படம் வெறுமனே இராணுவ மோதலையும் வீரத்தையும் மட்டும் சித்தரிக்காமல், போரினால் ஏற்படும் மனித இழப்புகள், உணர்வுகள் மற்றும் அமைதியின் அவசியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சல்மான் கானின் இந்தப் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Listen News!