• Apr 15 2026

இளைய மகள் பவதாரணியின் மரணம்... நிலைகுலைந்த இளையராஜா... கவலை தோய்ந்த முகத்துடன் வைத்தியசாலையில்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்த விடயம்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று காலமான அவரை பார்க்க கவலை தோய்ந்த முகத்துடன் இளையராஜா வைத்தியசாலை செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில்இலங்கையில் உயிரிழந்தார்.  இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் இலங்கை சென்றிருந்த இசைஞானி இளையராஜா தனது இளைய மகள் இறந்த செய்தியை கேள்விபட்டு கவலை தோய்ந்த முகத்துடன் பதறி ஓடி வந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவலாக பார்க்கபட்டு வருகிறது.

 

Advertisement

Advertisement