தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகத் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் சந்தானம், தனது தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் மன அமைதி குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரும் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு வரும் நிலையில், சந்தானம் அவற்றிலிருந்து விலகி இருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தான் போன் வாங்கிய காலத்திலிருந்தே ரிங்டோன் சத்தத்தைக் கேட்க விரும்பாததால் எப்போதும் போனை Silent Mode-லேயே வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Instagram Reels பார்ப்பதால் நேரம் செல்வதே தெரியாது என்பதால், அதனைத் தவிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக ஜிம், யோகா, தியானம் மற்றும் இசை போன்ற இயற்கையான செயல்பாடுகளில் நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக, யோகா மற்றும் தியானம் மனதிற்கு மிகப்பெரிய அமைதியை வழங்குவதாகவும், தனிமையில் இருப்பதுகூட ஒருவிதமான பேரானந்தத்தைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சந்தானத்தின் இந்தக் கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், இணையத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளன.
Listen News!