இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது சகோதரியை பார்க்க இலங்கை சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில்இலங்கையில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை சென்றிருந்த இசைஞானி இளையராஜா தனது இளைய மகள் இறந்த செய்தியை கேள்விபட்டு தனது மகளை பார்க்க இலங்கை மருத்துவ மனைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியை பார்க்க இன்று கொழும்பு சென்றுள்ளார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் கொழும்பு சென்றுள்ளார். அங்கிருந்து பாடகி பவதாரணியின் உடலை சென்னை கொண்டு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
 
                              
                             
                            _65b32844c83b7.png) 
                             
                                                    _65b32f2184278.png) 
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!