• Nov 09 2026

பட வாய்ப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும்... லாஸ்லியாவின் புதிய அவதாரத்தைப் பார்த்தீர்களா.?

shali / 4 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு உடல் எடையைக் குறைத்து புதிய தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் தனது இயல்பான பேச்சு, அழகான தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு முன்னணி நடிகர்களுடன் பெரிய திரைப்பட வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை.

இதற்கிடையில், தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய லாஸ்லியா, அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அந்த வகையில், தற்போது அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறித்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

திரைப்பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் லாஸ்லியாவுக்கு அடுத்ததாகப் பெரிய திரையில் எப்போது புதிய வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement