• Nov 09 2026

விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் சூர்யா எடுத்த அதிரடி முடிவு.! ரசிகர்கள் ஷாக்

shali / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா அரசியல் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, திரைப்படங்களில் நடிப்பதுடன் கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றார். குறிப்பாக, அகரம் அறக்கட்டளை ஊடாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றார்.

இந்நிலையில், அரசியல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து பேசிய அவர், "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மௌனமாக, உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்துகொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம். வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில், சூர்யாவின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, அரசியலுக்கு வருவது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள வெளிப்படையான கருத்துக்கள் ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இணையத்திலும் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement