நடிகை ஆலியா மானசா தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளமை தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை தனக்கு ஆறு முறை காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஒருதலையாகக் காதலித்தபோது ஏற்பட்ட மனவேதனை தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, தான் காதலித்த இளைஞர் தனது காதலை ஏற்க மறுத்து 'NO' எனக் கூறியதால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், ஒரு கட்டத்தில் கையைக் கீறிக்கொள்ளும் அளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில காதல் உறவுகளில் தான் மிகவும் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தபோதிலும், எதிர்தரப்பினர் அதே அளவிற்கு உறுதியாக இருக்கவில்லை எனவும் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது முன்னாள் காதலர் ஒருவர் தன்னைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அந்தப் பிரச்சினையிலிருந்து தன்னைப் பாதுகாக்க சஞ்சீவ் ஒரு ஹீரோவைப் போல வந்து காப்பாற்றியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆலியா மானசாவின் இந்த வெளிப்படையான பேச்சு, காதல் தோல்வி, மனவேதனை மற்றும் சஞ்சீவ் தனக்கு அளித்த ஆதரவு தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!