நடிகை பிரியங்கா மோகன், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்துப் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகன், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பது தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பேட்டி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், வெற்றிமாறன் சாரின் திரைப்படங்களை எப்போதும் விரும்பிப் பார்ப்பதாகவும், அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ‘வடசென்னை’ திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அரசன்’ திரைப்படம் ‘வடசென்னை’ படத்தின் அதே கதையுலகில், அதற்கு இணையாக நடைபெறும் கதையாக உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் ‘வடசென்னை’ திரைப்படத்துடன் ‘அரசன்’ படத்திற்கும் தொடர்பு இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தான் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் வடசென்னை வட்டார மொழியில் பேசுவது சற்று சவாலாக இருந்ததாகவும், இருப்பினும் விரைவாக அதற்குப் பழகிக்கொண்டதாகவும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பிரியங்கா மோகனின் இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. குறிப்பாக ‘வடசென்னை’ ரசிகர்கள் மத்தியில் ‘அரசன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!