நடிகர் விஜய் சேதுபதி, துபாயில் பணியாற்றிய காலத்தில் குடும்பத்திற்காகப் பல கஷ்டங்களை அனுபவித்ததாகப் பகிர்ந்துகொண்டுள்ள தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் உரையாடியபோதே அவர் தனது கடந்தகால வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதன்போது, துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் தனது வீட்டிற்கு 10,000 ரூபாய் அனுப்ப வேண்டிய நிலை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், செலவுகளைக் குறைத்து பணத்தைச் சேமிப்பதற்காகப் பல நாட்கள் போதிய உணவின்றி வாழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காலையில் தேநீர் மட்டுமே அருந்திவிட்டு, மதிய நேரத்தில் ஜூஸ் மட்டும் குடிப்பாராம். மாலையில் கோயிலுக்குச் சென்றால் அங்கு பிரெட் மற்றும் சென்னா வழங்குவார்கள் என்பதால் அதனை உணவாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அதேபோன்று, வெள்ளிக்கிழமைகளில் குருத்துவாராவுக்குச் சென்றால் தயிர் சாதம், சாம்பார் சாதம் வழங்கப்படுமாம். அந்த உணவைப் பெறுவதற்காகவே வெள்ளிக்கிழமைகளில் அங்கு செல்வதாகவும் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் அன்பைப் பெற்ற கலைஞராகவும் திகழும் விஜய் சேதுபதி, தனது வாழ்க்கையில் கடந்து வந்த இத்தகைய போராட்டங்களை வெளிப்படுத்தியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அவரது இந்த அனுபவப் பகிர்வு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றது.
Listen News!