சர்வதேச மேடையில் விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ள அரிய கௌரவம் தொடர்பான தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
நடிகர் விஜய் சேதுபதி சர்வதேச அளவில் இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மற்றுமொரு முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 54ஆவது சர்வதேச எம்மி விருது விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களைக் கௌரவிக்கும் முக்கியமான சர்வதேச விருது விழாக்களில் ஒன்றாக எம்மி விருது விழா விளங்குகின்றது.
இந்நிலையில், இவ்வாறானதொரு சர்வதேச விருது மேடையில் விருது வழங்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்குக் கிடைத்திருப்பது இந்தியத் திரையுலகிற்கு கிடைத்துள்ள மற்றுமொரு பெருமையாகப் பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, எம்மி விருது மேடையில் இந்தியத் திறமையின் சார்பில் விருது வழங்கும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது இயல்பான நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு மற்றும் தனித்துவமான திரைப்பயணம் மூலம் சர்வதேச ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ள விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதுடன், குறித்த தகவலும் தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!