• Nov 05 2026

சூர்யாவுடன் நடிக்க முடியாமல் போனது ஏன்.? நஸ்ரியா கொடுத்த விளக்கம்

shali / 3 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வரும் நஸ்ரியா, நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேரளாவில் ‘சீன்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே நடிகை நஸ்ரியா இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதன்போது, நடிகர் சூர்யா தன்னிடம் மூன்று திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறியிருந்ததாக நஸ்ரியா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சூர்யா அவ்வாறு கூறியது நகைச்சுவைக்காகத் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உண்மையில், சூர்யாவுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்திருந்தபோதிலும், படப்பிடிப்புத் திகதிகள் மற்றும் ஏனைய சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே தன்னால் அந்தப் படங்களில் நடிக்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சூர்யா போன்ற ஒரு சிறந்த நடிகரின் திரைப்பட வாய்ப்பைத் தான் எவ்வாறு நிராகரிக்க முடியும் என்றும் நஸ்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யாவுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது தனது விருப்பமின்மையால் அல்ல, தவிர்க்க முடியாத காரணங்களால் தான் என்பதை அவரது இந்தப் பேச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட நிலையில், தற்போது நஸ்ரியா பகிர்ந்துள்ள இந்தத் தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement