ஒரு காலத்தில் தனது அழகு, வசீகரமான தோற்றம் மற்றும் சிறப்பான நடிப்பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல் அழகாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், பல வெற்றித் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.
திருமணத்திற்குப் பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது துபாயில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்களில் கிளாமரான ஆடையில் மிகவும் அழகாகவும், ஸ்டைலான தோற்றத்திலும் காட்சியளிக்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரது அழகையும் தோற்றத்தையும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!