• Nov 18 2026

நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் புதிய முயற்சி.. மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானமா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான அபிராமி வெங்கடாசலம், சமூக வலைத்தளத்தின் மூலம் புதிய வருமான வழியொன்றை உருவாக்கியுள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகை அபிராமி வெங்கடாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்களைப் பார்வையிடுவதற்காக கட்டணச் சந்தா (Paid Subscription) முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தச் சந்தா முறையில் இணையும் ரசிகர்களுக்கு ஏனையவர்களால் பார்க்க முடியாத பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்களைப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கட்டணச் சந்தா முறையில் இதுவரையில் சுமார் 1,749 பேர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் நடிகை அபிராமி வெங்கடாசலத்திற்கு மாதமொன்றுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் மட்டுமன்றி, சமூக வலைத்தளங்களையும் வருமானம் ஈட்டுவதற்கான தளமாகப் பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றமைக்கு இது மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் ஆதரவைப் பயன்படுத்தி இவ்வாறான கட்டணச் சந்தா முறைகள் மூலம் பிரபலங்கள் வருமானம் ஈட்டுவது சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், அபிராமி வெங்கடாசலத்தின் இந்தப் புதிய முயற்சி மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்பான கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement