• Nov 10 2026

மகப்பேறு புகைப்படத்தால் ரசிகர்களை நெகிழ வைத்த சமந்தா.! லீக்கான போட்டோஸ்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனது கர்ப்பகால புகைப்படத்தை மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆடம்பரமான மகப்பேறு போட்டோஷூட் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இந்தத் தம்பதியினர் குடும்பத்தினருடன் பாரம்பரிய முறைப்படி சீமந்தம் நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், கர்ப்பகாலத்தை நினைவுகூரும் வகையில் சமந்தா பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக பிரபலங்கள் ஆடம்பரமான உடைகள் மற்றும் அலங்காரங்களுடன் மகப்பேறு போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.

ஆனால், சமந்தா சிவப்பு நிற மேலாடை, வெள்ளை நிற பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடியுடன் சோபாவில் இயல்பாக அமர்ந்தபடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

அத்துடன், 'இதையே எனது மகப்பேறு போட்டோஷூட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த எளிமையான அணுகுமுறையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement