நடிகர் சூர்யாவின் திரைப்பயணம் இந்த ஆண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் சற்று பின்னடைவைச் சந்தித்திருந்த சூர்யாவுக்கு, இந்த ஆண்டு வெளியான 'கருப்பு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்து நல்லதொரு கம்பேக்காக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால் சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டாக மாறியுள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த 'சீன்' திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் படக்குழுவினருக்காக சிறப்புப் பாராட்டு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது, படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் அழைத்து விருந்துபசாரம் வழங்கியதுடன், அனைவருக்கும் தலா 8 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தையும் பரிசாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. படக்குழுவினரின் உழைப்பை மதித்து சூர்யா – ஜோதிகா வழங்கிய இந்த அன்பளிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.
Listen News!