• Jan 19 2025

‘தங்கலான்’ படத்தை அம்போவென விட்டுவிட்ட பா ரஞ்சித்.. 45 நாட்களில் இன்னொரு அதிரடி திட்டம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியதங்கலான்என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்தங்கலான்படம் ரிலீஸ் குறித்த பணிகளை அப்படியே விட்டுவிட்டு அதற்கு முன் அவர் ஒரு குறுகிய கால திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அட்டகத்திஎன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித்.  அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர்மெட்ராஸ்’ ’கபாலி’ ’காலாஆகிய படங்களை இயக்கிய நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானசார்பாட்டா பரம்பரைஎன்ற சூப்பர் ஹிட் படத்தையும் அதன் பின்னர்நட்சத்திரம் நகர்கிறதுஎன்ற தோல்வி படத்தையும் இயக்கியிருந்தார்




இந்த நிலையில்தங்கலான்படத்தை இயக்கி முடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் தற்போது அவர் குறுகிய கால படைப்பாக ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கஅட்டகத்திதினேஷ் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனது முதல் பட நாயகனான தினேஷை அவ்வப்போது தனது படத்தில் சில கேரக்டருக்கு பயன்படுத்தி வந்த பா. ரஞ்சித் இப்போது அவரை மீண்டும் ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை 45 நாட்களில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து முடித்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மே மாதம்தங்கலான்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் அதன் பிறகு ஓரிரு மாதத்தில் 'அட்டக்கத்தி’  தினேஷ் நடிக்கும் படமும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement