• Mar 31 2025

ஒரே பட வெற்றியால் நயன், த்ரிஷா சம்பளத்தை நெருங்கும் பிரேமலு’ மமிதா பாஜூ.. என்ன மாயாஜாலம்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளிவந்தபிரேமலுஎன்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று நூறு கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த நிலையில்  தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்த மமிதா பாஜூ என்பவர் ஜிவி பிரகாஷ் உடன் நடித்தரிபெல்என்ற படம் இன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மமிதா பாஜூ ஏற்கனவே ஓரிரு தமிழ் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் அவரது சம்பளம் கோடியை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தமிழில் மட்டுமின்றி அவருக்கு தெலுங்கிலும் சில படங்கள் ஒப்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெலுங்கில் தமிழை விட அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் முன் வந்து உள்ளதாகவும் தெரிகிறது.



பிரேமலுஎன்ற ஒரே ஒரு படத்தின் வெற்றி காரணமாக மமிதா பாஜூவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழ் தெலுங்கு திரையுலகில் அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
பல முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு ஹீரோக்கள் மமிதா பாஜூவை தங்கள் படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்ய பரிந்துரை செய்வதாகவும் அதனால் அவரது கால்ஷீட் படிப்படியாக நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் அவருக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வரும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஒன்றரை கோடி சம்பளம் கொடுத்து அவரை புக் செய்து வருவதாகவும் இதே ரீதியில் போனால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவரது சம்பளம் நயன்தாரா, திரிஷா அளவுக்கு உயர்ந்து இடம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாயாஜாலத்திற்கு ஒரே காரணம்பிரேமலுபட வெற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement