• Apr 17 2026

மாலையுடன் தோன்றி சப்ரைஸ் கொடுத்த விஜய்.. ரசிகருக்கு செய்த நெகிழ்ச்சியான செயல்

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் "தமிழக வெற்றிக்கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்து பிரத்யேகமான செயலி மூலம்  கட்சி  உறுப்பினர்களையும் சேர்க்க  தொடங்கி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. 

இந்தநிலையிலேயே சமீபத்தில் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரபுதேவா ,பிரசாந்த் அவர்களுடன் இணைந்து நடித்து வரும் "தி கோட்" திரைப்படத்தின் இறுதிக்காட்சி படப்பிடிப்புக்காக கேரளா சென்றிந்தார்.அங்கு ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்திருந்தனர் அவரை காணும் ஆசையில் அவரது காரையும் சேதப்படுத்தி இருந்த வீடியோ வெளியாகி இருந்தது. 

அங்குள்ள ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டது  மட்டும் இன்றி அவர் மலையாளத்தில் பேசிய காணொளிகளும் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையிலேயே விஜய் தனது ரசிகர் ஒருவரை சந்தித்து நெகிழ்ச்சியான செயல் ஒன்றை செய்துள்ளார். 

தினமும் ரசிகர்களை சந்தித்து வரும் தளபதி விஜய் திடீரென  கழுத்தில் மாலையுடன் தோன்றி, ரசிகர்களுடன் கைகுலுக்கி பூங்கொத்துக்களை வாங்கி சென்றார்  .பின்பு மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்து அவருடன் புகைப்படமும்  எடுத்துக் கொண்டார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement