சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகளான ஐஸ்வர்யா இயக்குநராக ஒரு சில படங்களை இயக்கி தோல்வியை கண்டிருந்தார். எனினும் தற்போது அவர் எடுத்த புதிய அவதாரம் பற்றி இணையத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதாவது இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையில் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்த படம் வசூலில் சரிவை சந்தித்தது. அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.
இறுதியில் தனது தந்தையை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். ஆனாலும் அந்த படமும் படு விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு பல காரணங்களையும் அடுக்கினார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாரான போதும் அதனை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.
இதனால் அவரே புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு தயராகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் நெட்பிளிக்ஸ் தளத்திற்கும் பங்கு இருப்பதாகவும், இதனால் ரஜினி சற்று ஆறுதல் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த படம் சிறுவர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாகவும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!