• Jul 27 2024

மனுசனுக்கு மட்டும் இல்ல நாய்க்கும் ஒரே மனசுதான்! ஊனமுற்ற நாய்களை தத்தெடுத்த kpy பாலா !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. தொடர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த இவர் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஆகும்.


இவ்வாறு பிரபலமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதோடு உழைக்கும் பணத்தை வைத்து பல மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். அவ்வாறு சமீபத்தில் இளைஞன் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து , கண் பார்வை அற்ற சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தது என பல விடயங்களை செய்துள்ளார்.


இவ்வாறு பல உதவிகளை செய்து கயுக கர்ணன் என மக்களால் அழைக்கப்படும் இவர் சமீபத்தில் ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் ஒருவருக்கு உதவி செய்துள்ளார். அது மட்டுமின்றி இனி இவற்றை வளர்ப்பதற்கான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement