• Nov 23 2024

ஒரு தமிழ் படம் கூட வெளிவராத வாரம்.. ‘கல்கி’ படத்திற்காக விட்டு கொடுக்கப்பட்டதா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை என்பது சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ரிலீசுக்கு தயாராகி ஏற்கனவே பல திரைப்படங்கள் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய வெள்ளிக்கிழமை அன்று ஒரு தமிழ் படம் கூட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. நேற்று முன்தினம் பிரபாஸ், கமல்ஹாசன் நடித்த ’கல்கி 2898  ஏடி’ திரைப்படம் வெளியான நிலையில் அந்த படமே கிட்டத்தட்ட பல திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டதால் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்தடுத்த வாரங்களில் மாஸ் நடிகர்களின் படங்கள் உட்பட பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. குறிப்பாக ஜூலை 5ஆம் தேதி சோனியா அகர்வால் நடித்த ’7ஜி’ உட்பட சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து ஜூலை 12ஆம் தேதி கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியாவதால் அந்த படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை என்றும் சோலோவாக அந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இரண்டு வாரங்கள் கழித்து அதாவது ஜூலை 26 ஆம் தேதி தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.  இந்த படத்திற்கும் இதுவரை போட்டி இல்லாத சூழல் தான் ஏற்பட்டுள்ளது.

இதை எடுத்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விக்ரம் நடித்த ’தங்கலான்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரகு ராத்தா’ உள்பட ஒரு சில படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தளபதி விஜய்யின் ’கோட்’ படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement