• Apr 04 2025

மூளை அறுவை சிகிச்சை எல்லாம் இல்லை.. எல்லாம் சுத்தப் பொய்.. நடந்தது இதுதான்: மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்துக்கு நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என்றும் முழுக்க முழுக்க பொய் என்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் சில மணி நேரங்களில் வீடு திரும்பிய விடுவார் என்று கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், எனவே அறுவை சிகிச்சை செய்யவும் முடிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தது.



இந்த நிலையில் நேற்று இரவு அஜித்துக்கு நான்கு மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இது குறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில்அஜித் அவர்களுக்கு மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை, முழுக்க முழுக்க தவறான தகவல். வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருடைய காதுக்கு கீழ் நரம்பு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அரைமணி நேரத்தில் அதற்கான சிகிச்சையும் முடிக்கப்பட்டது. ஐசியு வார்டில் இருந்து நேற்று சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார். எனவே அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை என்று பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அஜித் மேனேஜரின் இந்த விளக்கத்தை அடுத்து ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement