தமிழில் தயாராகும் திரைப்படங்கள் சுமாரான வெற்றி அல்லது தோல்வி, படுதோல்வி என்ற நிலை இருந்து
வரும் நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்து வரும் மலையாள படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழர்களின் காசுகளை அள்ளிக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் தமிழகத்தில்
சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது
என்பதும் தமிழகத்தில் மட்டுமே மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில மலையாள
திரைப்படங்கள் தமிழில் நல்ல வெற்றி பெற்றுள்ள
நிலையில் தமிழ் படங்களான ’லால் சலாம்’ உள்ளிட்ட
பல படங்கள் தோல்வியை சந்தித்து வருவது தமிழ் திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற இன்னொரு திரைப்படமான ’பிரேமலு’ திரைப்படம் தமிழில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ’பிரேமலு’
என்ற அதே பெயரிலேயே தமிழில்
ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அதேபோல் தெலுங்கிலும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக அடுத்த வாரம் இந்த படம் தமிழில்
ரிலீஸ் ஆகும் என்றும் அதனை அடுத்து ஒரு
சில நாட்களில் இந்த படத்தின் ஓடிடி
ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஹாட் ஸ்டார் நிறுவனம்
வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து மலையாள திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றி பெற்று வரும் நிலையில் தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெற தவறி வருவது
தமிழ் திரை உலகினருக்கு பெரும்
பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இனி மேலாவது கதைக்கு
முக்கியத்துவம் கொடுத்து ஹீரோயிசம் இல்லாமல் படம் எடுத்தால் மட்டுமே
தமிழ் திரை உலகினர் தப்பிக்க
முடியும் என்றும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களை மட்டும்
நம்பி படம் எடுத்தால் தோல்வி
தான் கிடைக்கும் என்றும் மக்களின் ரசனைகள் முற்றிலும் மாறிவிட்டது என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!