• Jan 19 2025

நடிப்பு அரசி ஊர்வசியின் ‘ஜெ பேபி’ படம் எப்படி இருக்குது? திரை விமர்சனம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ளஜெ பேபிஎன்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பேபி என்ற கேரக்டரில் ஊர்வசி நடித்துள்ளார். தன்னால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதை கண்டு அதிருப்தி அடைந்த ஊர்வசி, தன்னால் தனது மகன்களுக்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்.

இதனை அடுத்து காணாமல் போன அம்மாவை அவரது இரண்டு மகன்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் கொல்கத்தாவில் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைக்கிறது. இதனை அடுத்து கொல்கத்தா செல்லும் இரண்டு மகன்கள் தனது அம்மாவை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ். மேலும் இந்த படத்தில் கொல்கத்தாவில் உண்மையாகவே தொலைந்து போன அம்மாவை கண்டுபிடிக்க உதவிய சிலரும் நடித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.



ஊர்வசி தான் இந்த படத்தின் மெயின் கேரக்டர் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர் நடிப்பில் அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பு அரசி என்று பெயர் எடுத்த ஊர்வசிக்கு நடிப்பை பற்றி சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நன்கு கேரக்டரை நன்கு புரிந்து கொண்டு சென்டிமென்ட் மற்றும் காமெடியில் கலக்கி உள்ளார். அவரது ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது, சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களை அழ வைத்து விடுகிறது.

ஊர்வசியை அடுத்து அவரது மகனாக நடித்துள்ள தினேஷ் இந்த படத்தில் சற்று வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் இன்னொரு மகனான லொள்ளு சபா மாறன் காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு அம்மா என்பவர் எவ்வளவு தான் பிரச்சனை செய்தாலும், அவர் அம்மா தான், அவரை நாம் கண்டிப்பாக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மெசேஜை இந்த படத்தின் மூலம் அனைவருக்கும் கொண்டு சேர்த்துள்ளார் இயக்குனர் சுரேஷ் மாரி. அவரது கடுமையான உழைப்பு படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. அவருக்கு அனைத்து டெக்னீசியன்கள் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் சில இடத்தில் லாஜிக் மீறல் படம் பார்ப்பவர்களை சோர்வடைய செய்கிறது. சில சில குறைகள் இருந்தாலும் கிளைமாக்ஸில் பார்வையாளர்களை அழ வைப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில்மஞ்சும்மெல் பாய்ஸ்போலவே இந்த படமும் ஒரு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டிய தகுதி அனைத்தும் உள்ளது.

Advertisement

Advertisement