• Jan 19 2025

ஒரு வருடமாக விஜயகாந்தை பார்ப்பதற்கு முயற்சி செய்த விஜய்-கேப்டன் தரப்பிலிருந்து வராத பதில், உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில விஷயங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார். அதேபோல் அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. 

இதனால் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.  அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


 அதாவது நுரையீரல் அழற்சி ஏற்பட்டதன் காரணமாக நேற்று முன் தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.இவரது உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதுவரை பொது இடத்தில் நாம் யாரும் நடிகர் விஜய்யை இப்படி பார்த்ததே இல்லை. அப்படி மனம் உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுதார். 


இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.அதாவது விஜய்யின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் விஜயகாந்த். அவர் உடல் சுகயீனம் உற்று இருக்கும் போது விஜய் எதற்காக ஒருநாள் கூட நேரில் சென்று பார்க்காமல் இருந்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து பிரபல பத்திரிகையார் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது விஜய், விஜயகாந்தை நேரில் சென்று பார்ப்தற்காக ஒரு வருடமாக முயற்சி செய்து வந்தாராம்.ஆனால் விஜயகாந்த் தரப்பிலிருந்து யாரும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லையாம்.அதனால் தான் விஜய் அவரைப் பார்க்க முடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement