• Mar 22 2025

முத்துவால் மரியாதையிழந்த மீனா..! கலியாண வீட்டில ஏற்பட்ட புதுக் குழப்பம்!

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கலியாண வீட்ட வந்தவ சரக்கோட வாறதப்பாத்த முத்து அத தன்ர கையில வாங்கி என்ன அண்ண கலியாண வீட்டில சரக்கோட திரியுறீங்க என்று கேக்கிறான். அதைப் பார்த்த மனோஜ் முத்துவுக்கு எங்க போனாலும் குடிக்கிறது தான் வேலை என்கிறான். பிறகு மனோஜ் விஜயா கிட்ட வந்து அம்மா சீக்கிரம் இங்க இருந்து போகலாம் என்று சொல்லுறான். அதுக்கு விஜயா ஏன்டா இன்னும் கலியாணமே முடியல அதுக்குள்ள போகணும் என்கிற என்று கேக்கிறாள்.

அதுக்கு மனோஜ் நாம இங்க இருந்தோம் என்றா நம்ம மானம் தான் போகும் என்றான். பிறகு அம்மா உன்ர ரெண்டாவது பிள்ள தண்ணியடிக்கப் போய் இருக்கான் என்று சொல்லுறான். அதைக் கேட்ட விஜயா அவன் இன்னும் திருந்தவே இல்லயா என்று கேக்கிறாள்.பின் அவன அப்புடியே விடக் கூடாது அண்ணாமலை கிட்ட போய் சொல்லோனும் என்கிறாள்.


அதைத் தொடர்ந்து விஜயா அண்ணாமலையக் கூப்பிட்டு முத்து கலியாண வீட்ட வந்து தண்ணியடிக்கிறான் என்று சொல்லுறாள். இதைக் கேட்ட அண்ணாமலை அவன் இப்ப எல்லாம் குடிக்கிறதே இல்ல  என்று சொல்லுறான். பிறகு இந்தக் கலியாணத்த நல்ல படியாப்  பேசி முடிச்சதே அவன் தான் அப்படி இருக்கும் போது  அதைக் குழப்புற மாதிரி எதுவும் பண்ண மாட்டான் என்கிறார்.

பிறகு அண்ணாமலை மீனா கிட்ட போய் முத்துவ கொஞ்சம் பாத்துக்க என்று சொல்லுறார். அதுக்கு மீனா ஏன் மாமா ஏதும் பிரச்சனயா என்று கேக்கிறாள். இதைக் கேட்ட விஜயா உன்ர புருஷன் குடிச்சிருக்கான் அதுதான் அப்படிச் சொல்லுறார் என்றாள். விஜயா சொன்னதைக் கேட்டு மீனா கோபம் கொல்லுறாள். பிறகு மீனா முத்துவக் காணேல என்று தேடுறாள். பின் முத்துவப் பாத்து ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க என்று கேக்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement