• Feb 22 2025

மீண்டும் இணையும் மிரட்டல் ஜோடி! சமந்தா-தமன்னாவை தொடர்ந்து ஐட்டம் சோங்கில் நயன்தாரா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் ‘தி ராஜா சாப்". மீடியா பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குநர் மாருதி இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய அப்டேட் படி லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


தி ராஜா சாப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாட இருப்பதாகவும், இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல், நயன்தாரா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 


நடிகை சமந்தா, தமன்னா ஆடிய கவர்ச்சி பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பார்க்கப்பட்டு வைரலாகிய நிலையில் தற்போது நடிகை நயன்தாரா அப்படி ஒரு பாடலுக்கு கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் ’தி ராஜா சாப்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகிய நிலையில் இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

Advertisement