பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கோஸ்ட் ஆக களம் இறங்கியவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பைனலில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளதோடு அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் கலந்து கொண்டுள்ளார். அவர்கள் விடுதலை 2 படத்தின் பட ப்ரொமோஷனுக்காக கலந்து கொண்டுள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் கலந்து கொள்பவர்கள் சினிமா வாய்ப்புக்காகவும், மேலும் பிரபலம் ஆகுவதற்காகவும் போட்டி போட்டு கலந்து கொள்கின்றார்கள்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த சீசனில் வெற்றி பெற்ற வின்னரை ராம்சரண் தனது கைகளாலேயே வெற்றிக்கிண்ணத்தை வழங்கி இருந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக இருந்தது.
இவ்வாறான நிலையிலே விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் விடுதலை 2 படத்தின் பட ப்ரொமோஷன் பணிகளுக்காக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலில் கலந்து கொண்டுள்ளார்கள் தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகின்றன.
Listen News!