• Jan 19 2025

தமிழ்நாட்டில் மெயின் பிக்சரே துல்கர் சல்மான் தானா? லக்கி பாஸ்கருக்கு எகிறிய மவுசு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தீபாவளியை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்த பிளடி பெக்கர், ஜெயம்ரவியின் பிரதர் மற்றும் துல்கர் சல்மான்  நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகின்றது. இதற்கு அடுத்த நிலையில் கவின் நடித்த பிளடி பெக்கர் திரைப்படமும், இறுதியில் ஜெயம் ரவியின் பிரதர் படம் ஓரளவு வரவேற்பு பெற்ற படமாகவும் காணப்படுகிறது.

d_i_a

அதேசமயம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் சாதாரண நபராக காணப்படும் ஹீரோ அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி எப்படி பணக்காரராக மாறுகின்றார் என்பதை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, மலையாளத்தை முதன்மையாகக் கொண்டு லக்கி பாஸ்கர் படம் உருவானாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரங்களை கடக்க உள்ள நிலையில் இதுவரையில் 65 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படம் தமிழ்நாட்டில் வெளியான நாளிலிருந்து தற்போது வரையில் நாளுக்கு நாள் தியேட்டர்  காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.. இது துல்கர் சல்மானுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகின்றது.

அதன்படி ஆரம்பத்தில் 75 ஷோக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் ஆறாவது நாள் முடிவில் சுமார் 534 ஷோக்ளை பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் வெற்றி நடை போட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement