• Sep 17 2025

நாஞ்சில் விஜயன் விவகாரம்; பக்கம் பக்கமாக மன்னிப்பு கேட்ட ஜாஸ்மின்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நாஞ்சில் விஜயன்,  தன்னை காதலித்ததாகவும் பலமுறை தனிமையில் நெருக்கமாக இருந்ததாகவும் விஜே வைஷு  குற்றம் சாட்டி இருந்தார்.  இந்த விடயம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

இதைத் தொடர்ந்து  நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவியும், எதற்காக வைஷு இப்படி பண்ணுறாங்க என்று தெரியல..    உங்களுக்கு மனசாட்சி உண்டு தானே.. எங்களை விட்டு விடுங்கள் என்று தனது வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

அதன்பின்பு வைஷுவின் நண்பி  நாஞ்சில் விஜயனும் வைஷுவும்  சிஸ்டர் பிரதர் டைப் தான்.. அவர்கள் ஒன்றாக பேசி பழகி இருக்காங்க.. ஆனா  அவங்க இருவரும் உடலுறவு கொள்ளும் அளவுக்கு  உறவு இருக்காது..  இந்த விஷயத்தில் விஜயன் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறினார். 


மேலும்  பிக்பாஸ் சீசன் நெருங்கும் போது பேட்டி கொடுப்பதை வைஷு வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  இப்போது நாஞ்சில் விஜயின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்  என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் பாடகி சுசித்ரா  பற்றியும் பேசியிருந்தார் ஜாஸ்மின்.

இந்த நிலையில், எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று  ஜாஸ்மின் தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் நான் இனி எந்த பேட்டியும் கொடுக்கப் போவதில்லை. எதற்கும் ரியாக்ட் பண்ண போவதில்லை. அதற்கு காரணம் விஜே வைஷு தான் கொடுத்த புகாரை அவரே திரும்ப பெற்றதுதான் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement