• Apr 16 2025

சத்தியாவைக் காப்பாற்றப் போராடும் முத்து..! செய்வதறியாது தவிக்கும் மீனாவின் குடும்பம்..!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சத்தியாவை ரவுடிகள் இழுத்துக் கொண்டு போறதை மீனாவும் முத்துவும் சிசிடீவியில் பாக்கிறார்கள். மேலும் முத்து அந்த வண்டியோட நம்பரை சூம் பண்ணிக் காட்டச் சொல்லிச் சொல்லுறார். அதனைப் பார்த்த மீனா அவனுக்கு ஏதாவது ஆகிடுமோ எனப் பயமா இருக்கு என்கிறார். மேலும் பரீட்சைக்கு வேற நேரம் ஆகிட்டு இருக்கு என்ன பண்ணுறது என்று தெரியல பொலிஸுக்கு சொல்லிடலாமா என்று முத்துவைப் பாத்து கேக்கிறார்.

அதைக் கேட்ட முத்து பொலிஸுக்கு போனா லேட் ஆகிடும் நாங்களே கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுறார். மேலும் சத்தியாவை நான் எப்படியாவது கண்டுபிடிச்சிருவேன் நீ வீட்ட போய் சீதாகூட இரு என்று மீனாவைப் பாத்து சொல்லுறார். இதனை அடுத்து சீதா தன்ர லவ்வருக்கு போன் எடுத்து சத்தியாவைக் காணேல என்று சொல்லுறார். மேலும் தனக்குப் பயமா இருக்கு என்கிறார்.


இதனை அடுத்து முத்து சைபர் கிரைம் அதிகாரியிடம் போய் சத்தியாவைக் காணேல என்று சொல்லி அவன்ட  நம்பர் கடைசியா எங்க இருந்தது என்று பாத்துச் சொல்லச் சொல்லுறார். அதுக்கு அந்த அதிகாரிகள் நீங்க முதல்ல பொலிஸிட்ட போய் சொல்லுங்க என்கிறார்கள். இதனை அடுத்து சீதாவோட லவ்வர் சத்தியான்ட நம்பர் எங்க இருந்தது என்றதைப் பாத்து சீதாவுக்கு அனுப்புறார். 

அதனை சீதா முத்துவுக்கு அனுப்பி அந்த இடத்திற்குப் போய் சத்தியாவைப் பார்க்கச் சொல்லிச் சொல்லுறார்.  இதனை அடுத்து மீனாவோட அம்மா சத்தியாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடயே இருக்க மாட்டேன் என்கிறார். இதனை அடுத்து முத்து சத்தியா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சு அந்த ரவுடியைப் போட்டு அடிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement