தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தும் செய்தியொன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டான்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு பெரிய இழப்பாகவே கருதப்படுகின்றது.
எஸ்.எஸ்.ஸ்டான்லி தனது திரையுலகப் பயணத்தை இயக்குநராக ஆரம்பித்தார். தன்னுடைய முதல் படமான 'ஏப்ரல் மாதத்தில்' என்ற காதல் கதையை 1990களில் இயக்கியிருந்தார். ஸ்டான்லி தனது திறமைகள் மூலம் பல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார்.
இயக்குநராக மட்டுமின்றி, ஸ்டான்லி ஒரு காலத்தில் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர். குறிப்பாக, பல படங்களில் அவர் எடுத்துக் கொண்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் பதியும் வகையில் காணப்பட்டது.
குறிப்பாக, ராவணன், ஆண்டவன் கட்டளை மற்றும் மகாராஜா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்பொழுது எஸ்.எஸ். ஸ்டான்லியின் மறைவுக்குப் பின்னர் திரைத்துறை பிரபலங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து இரக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
அவரது குடும்பத்தினரும், அவரை நேசித்த திரையுலக நண்பர்களும் இன்று ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். அவரது குடும்பத்திற்கு திரைத்துறை சார்பாக பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
Listen News!