• Oct 13 2024

ரோகிணிக்கு மரண பயத்தை காட்டிய மொட்டை கடதாசி..! முத்துக்கு வந்த ஐடியா? விஜயா ஹாப்பி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், நாச்சியார் பாட்டிக்கு லவ் மேரேஜா என்று ஸ்ருதி கேட்க, அவர் வெட்கப்பட்டு நான் லவ் பண்ணல அவர்தான் என்னைய லவ் பண்ணினார் என்று சொல்லுகிறார்.

அதன் பின்பு விஜயாவை அண்ணாமலைக்கு ஊட்டி விடுமாறு சொல்ல, அவர் நான் சாப்பிட்டேன் எனக்கு போதும் என எழுந்து சென்று விடுகின்றார். இதனால் விஜயாவின் முகம் ஒரு மாதிரி ஆகிவிடுகின்றது. அதன் பின்பு பாட்டி விஜயாவையும் அண்ணாமலையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு கூட்டி சென்று வருமாறு முத்துவிடம் சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து முத்து புது கார் வாங்கி வந்து அதில் விஜயாவையும் அண்ணாமலையும் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கூட்டிச் செல்கின்றார். இதன் போது இருவரும் ஒரு ஒரு ஓரத்தில் இருக்க, வேண்டும் என்றே பிரேக்  போட்டு அவர்களை முட்ட வைத்து செல்கின்றார் முத்து.

ஒரு கட்டத்தில் அண்ணாமலை இவன் என்ன இப்படி வண்டி ஓட்ரான்? என் கைய பிடிச்சுக்கொண்டு பத்திரமா இரு என்று விஜயாவிடம் சொல்ல, விஜயாவும் அண்ணாமலையின் கையை பிடித்துக் கொண்டு பத்திரமாக இருக்கின்றார். இதை பார்த்து மீனாவும் முத்துவும் சந்தோஷப்படுகிறார்கள்.


இன்னொரு பக்கம் மனோஜ் கடைக்கு வந்த நபர் ஒருவர் கடதாசி ஒன்றை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். அந்த கடதாசியில் உன்ன சுத்தி இருக்கிறவங்களால உனக்கு பிரச்சினை வரும் என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாசித்து விட்டு எல்லா இடமும் ஓடிப் போய் தேடிப் பார்க்கின்றார் அந்த நபரை காணவில்லை.

அதன்பின்பு அந்த இடத்திற்கு ரோகிணி வந்து மனோஜை பிடிக்க, அவர் பயந்து நிற்கின்றார். பின்பு லெட்டரை காட்டவும் இது யாரும் சும்மா பண்ணி இருப்பாங்க என்று ரோகிணி சமாளிக்கின்றார். ஆனாலும் தன்னுடைய விஷயத்தைத் தான் யாரும் போட்டுக் கொடுக்கப் போகின்றார்களோ என்ற பயம் ரோகிணிக்குள் காணப்படுகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement