• Jan 19 2025

கல்லூரி விழாவுக்கு ஆபாச உடையில் வந்தாரா? குவியும் கண்டனங்களும் அமலாபால் பதிலடியும்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த நடிகை அமலாபால், குட்டையான உடை அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது இந்த உடைக்கு நெட்டிசன்கள் இணையதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபலமாக இருந்து வரும் அமலாபால் சமீபத்தில் குழந்தை பெற்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி என்பது தெரிந்தது. மேலும் அவர் நடித்த ’லெவல் கிராசிங்’ என்ற திரைப்படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அமலா பால் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கவர்ச்சியான உடை அணிந்து வந்ததால், மோசமான கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது. மிகவும் குட்டையான உடையை கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு பிரபலமான நடிகை உடை அணிந்து வந்தால் அது மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாதா? இது என்ன படப்பிடிப்பா? நாகரீகமான ஆடை அணிந்து வரலாமே என்று பலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு அமலாபால் பதிலடி கொடுத்துள்ளார். எனது உடையில் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது’ என்று தெரிவித்தார். மேலும் ’நான் ஷார்ட் அணிந்து வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு எந்தவித அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

அமலாபாலின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது. நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் போது எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள், அது உங்களது உரிமை, ஆனால் கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது நாகரீகமான ஆடையை அணிய வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் உடை என்பது அவரவர் சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்றும் பலர் அமலாபாலுக்கு ஆதரவாகவும் கமென்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement