• Apr 14 2026

எதிர்ப்புகளை மீறி இணைந்த காதல்.. எளிமையாக முடிந்த மோனலிசா - பர்மான் கான் திருமணம்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

கும்பமேளா விழாவில் தோன்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சமூக ஊடகங்களில் வைரலாகி பிரபலமான மோனலிசா, தற்போது தனது காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

 பல சிக்கல்கள் மற்றும் எதிர்ப்புகளை சந்தித்த பின்னர், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் அவர் ஒரு திரைப்படத்திலும் நடித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்தது. மோனலிசா தனது காதலன் பர்மான் கானுடன் கேரளாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருவனந்தபுரம் தம்பானூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததாக தகவல்கள் வெளியாகின. குடும்பத்தினரின் எதிர்ப்பு மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் போலீசின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிய நிலையில், இருவரும் தங்களது காதலை திருமணமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் மோனலிசா மற்றும் பர்மான் கான் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.இதுகுறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டிருக்க, சிலர் இந்த சம்பவம் குறித்து ஆச்சரியமும் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement