• Mar 11 2026

அடுத்த சம்பவத்திற்கு ரெடியான சிவகார்த்திகேயன்... புதிய இயக்குநருடன் கூட்டணி.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

அடுத்த சம்பவத்திற்கு ரெடியான சிவகார்த்திகேயன்... புதிய இயக்குநருடன் கூட்டணி.! வெளியான அதகள அப்டேட் 





தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். பல புதிய இயக்குநர்களுக்கும் திறமையான கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கி அவர்களை திரையுலகில் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அவர் தயாரித்த சமீபத்திய திரைப்படமான தாய்கிழவி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், அந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.



இத்திரைப்படத்தில் முன்னணி நடிகையான ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தனது அடுத்த தயாரிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தனது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை அம்மாமுத்து சூர்யா இயக்க உள்ளதாக அவர் அறிவித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அம்மாமுத்து சூர்யா இயக்குநராக திரையுலகில் அறிமுகமாகிறார்.


Advertisement

Advertisement